வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (17/06/2014)

கடைசி தொடர்பு:11:56 (17/06/2014)

ஒண்ணேகால் கோடி சம்பளம் கேட்கிறாரா காஜல் அகர்வால்?

சுராஜ் இயக்கும் புதிய படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக நடிக்க ஒண்ணே கால் கோடி சம்பளம் கேட்கிறாராம் காஜல் அகர்வால்.

தமிழில் காஜல் அகர்வால் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் 'ஜில்லா'. அதற்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்திலும், ராம் சரணுடன் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்தியிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில், சுராஜ் இயக்கும் புதிய படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக நடிக்க வைக்க காஜல் அகர்வாலை அணுகி இருக்கிறார்கள். ஒண்ணே கால் கோடி சம்பளம் தந்தால் நடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறாராம், காஜல்.

சம்பளப் பிரச்னை காரணமாகத்தான் 'நண்பேன்டா', 'உத்தம வில்லன்' படங்களில் நடிக்கும் வாய்ப்பை காஜல் அகர்வால் இழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்