அஞ்சானோடு மோதுகிறதா வாலு? | Anjaan, Surya, Lingusamy, Vaalu, Simbu, VijayChandar, அஞ்சான், சூர்யா, லிங்குசாமி, வாலு, சிம்பு, விஜய்சந்தர்

வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (17/06/2014)

கடைசி தொடர்பு:14:31 (17/06/2014)

அஞ்சானோடு மோதுகிறதா வாலு?

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் 'அஞ்சான்'. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

'அஞ்சான்' இறுதிக்கட்டத்தை  நெருங்கிக் கொண்டிருக்கிறது.  படக்குழு முன்பே அறிவித்திருந்த படி இப்படம் ஆகஸ்ட் 15ல் படம் வெளிவர உள்ளது.

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கும் படம் 'வாலு'. ஷக்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தொடர்ந்து ஏற்பட்ட சில பிரச்னைகளின் காரணமாக படம் தாமதமாகவே உருவானது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் செய்வதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது 'வாலு' படமும் ஆகஸ்ட் 15ல் வெளிவரப்போவதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம். 'அஞ்சான்', 'வாலு' இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்