சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு - 2 ? | SundarC, Vision I global medias, Kalakalappu 2, சுந்தர்.சி, விஷன் ஐ குளோபல் மீடியாஸ், கலகலப்பு2

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (24/06/2014)

கடைசி தொடர்பு:12:15 (24/06/2014)

சுந்தர்.சி இயக்கும் கலகலப்பு - 2 ?

விஷன் ஐ குளோபல் மீடியாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் காமெடி திரில்லர் படம் 'அரண்மனை'.

சுந்தர்.சி, வினய், ஹன்சிகா, சந்தானம், அண்ட்ரியா, லட்சுமி ராய், கோவை சரளா எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருக்கிறது.

இப்படத்தின் இசையும் கூடிய விரைவில் வெளியாக உள்ளது என அறிவித்துள்ளது படக்குழு.

இப்படம் முடிந்த கையோடு சுந்தர்.சி விஷன் ஐ குளோபல் மீடியாஸ் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் இயக்கித்தர ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் தொடங்க உள்ளதாம். இப்படத்தின் நடிகர்களும் தொழிநுட்பக்கலைஞர்களும் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது இயக்குநர் தரப்பு.

அநேகமாக இப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் சிவா, விமல், ஓவியா, அஞ்சலி நடித்த 'கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைக்கும் திட்டத்திலிருக்கிறாராம் சுந்தர்.சி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close