வேலையில்லா பட்டதாரி படத்திற்கு புரமோஷன் வீடியோ!

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தில் தனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். வொண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தனுஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

மேலும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி 6 நாட்களில் மட்டும் 12 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.இந்நிலையில் படத்தின் புரோமஷனுக்காக எக்ஸ்க்ளூசிவ் வீடியோ பாடல் ஒன்றை படக்குழு உருவாக்கி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.

தனுஷ் மற்றும் அனிருத் இடம்பெறும் இந்த எக்ஸ்க்ளூசிவ் வீடியோ கூடிய விரைவில் யூடியூப், மற்றும் டிவி சேனல்களில் வரவிருப்பதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!