மனம் படத்திற்கு குரல் கொடுக்கும் கமல், மாதவன்!

விக்ரம் குமார் இயக்கத்தில் அக்கினேனி நாகேஷ்வர ராவ், நாகார்ஜுனா, நாகசைதன்யா நடித்து தெலுங்கில் வெளியான படம் 'மனம்'. இப்படம் வெளியாகி ரசிகர்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அக்கினேனி குடும்பத்தின் மூன்று தலைமுறை நாயகர்கள் நடித்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட  இப்படத்தை தெலுங்கு திரைப்பிரலங்கள் மட்டுமல்லாது தமிழ் திரைப்பிரபலங்களும் பாரட்டியுள்ளனர்.

இந்த ஆதரவால் 'மனம்' தற்போது தமிழில் டப் செய்யப்பட உள்ளது. இப்படத்திற்கு தமிழில் டப்பிங் குரல் கொடுக்க உலக நாயகன் கமலிடமும், மாதவனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் மூத்த தலைமுறை நடிகர் நாகேஷ்வரராவிற்கு குரல் கொடுக்க உலகநாயகன் கமலை அணுகியுள்ளனர் படக்குழுவினர். சில காட்சிகளே வரும் நாகேஷ்வர ராவ் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்க கமலும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

மேலும் அவருக்கு அடுத்த தலைமுறை நடிகரான நாகார்ஜுனாவிற்கு குரல் கொடுக்க மாதவனை அணுகியுள்ளனர். இப்படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த உலக நாயகன் படம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மன்மதன் அம்பு படத்திற்கு பிறகு உலகநாயகன், மேடி இணையும் அடுத்த படம் இதுவாகவே இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!