வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (28/06/2014)

கடைசி தொடர்பு:12:11 (28/06/2014)

நஸ்ரியாவிற்கு பதில் சமந்தா?

அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான்,  ஃபஹத் பாசில்,  நிவின் பாலி, நஸ்ரியா நசீம், இஷா தல்வார், பார்வதி மேனன், நித்யா மேனன் ஆகியோர் நடித்து மலையாளத்தில் வெளியான படம் 'பெங்களூர் டேஸ்'.

இப்படம் வெளியாகி மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

ரீமேக் செய்யும் இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பெயரிப்படாத இப்படத்தை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து தில் ராஜு தயாரிக்கிறார்.

இப்படத்தில் நஸ்ரியா நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பார் எனக் கூறப்படுகிறது.இதைப் பற்றிய அதிகாரப் பூர்வதகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்