வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (02/07/2014)

கடைசி தொடர்பு:11:58 (02/07/2014)

தமிழில் ரீமேக் ஆகும் 'பெங்களூர் டேஸ்?'

அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான்,  ஃபஹத் பாசில்,  நிவின் பாலி, நஸ்ரியா நசீம், இஷா தல்வார், பார்வதி மேனன், நித்யா மேனன் ஆகியோர் நடித்து மலையாளத்தில் வெளியான படம் 'பெங்களூர் டேஸ்'.

இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யபப்பட இருக்கிறது. இப்படத்தை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து தில் ராஜு தயாரிக்கிறார். தெலுங்குடன் சேர்த்து தமிழிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாம்.

 

தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை பாஸ்கர் இயக்குகிறாராம். இவர் தெலுங்கில்  'பொம்முரிலு', 'பருகு', 'ஆரஞ்ச்' போன்ற படங்களை இயக்கியவர். தெலுங்கில் இவர் இயக்கிய 'பொம்முரிலு' தமிழில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'பெங்களூர் டேஸ்' பட ரீமேக்கில் நடிக்க சமந்தா உட்பட மூன்று முன்னணி ஹீரோ, ஹீரோயின்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்