400 திரையரங்குகளில் 'வேலையில்லா பட்டதாரி?' | dhanush,amalapal,velraj,anirudh,vip,தனுஷ்,அமலா பால், வேல்ராஜ்,அனிரூத்,வேலையில்லா பட்டதாரி.

வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (04/07/2014)

கடைசி தொடர்பு:10:27 (04/07/2014)

400 திரையரங்குகளில் 'வேலையில்லா பட்டதாரி?'

தனுஷ் , அமலாபால் நடித்து வேல்ராஜ் இயக்கத்தில்  உருவான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் இம்மாதம் 18ம் தேதி வெளியாக உள்ளது.

தனுஷ் தயாரிப்பில் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்' வெளியிடும் இப்படம் அனைத்து சினிமா தரப்பினரையும் எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

படத்தின் டிரெய்லர் மற்றும் அனிருத் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பால் தமிழ்நாடு முழுக்க தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி'யை வெளியிடுவதில் விநியோகஸ்தர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

தனுஷின் 25வது படமான 'வேலையில்லா பட்டதாரி' தற்போது சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'வேலையில்லா பட்டதாரி' வெளியாகும் என தெரிகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு தனுஷின் படம் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close