எனக்கு அலியா பட் போல் மனைவி வேண்டும்! - வருண் தவான் அதிரடி

வருண் தவான் -அலியா பட் இருவரும் காதலிப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரைப் பற்றி பாலிவுட்டில் அதிகம் கிசுகிசுக்கப்படுகிறது.

ஷாப்பிங் செல்வது , பார்ட்டிகளில் பங்கேற்பது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது  என பல இடங்களில் இருவரும் ஜோடியாக சுற்றிவந்த நிலையில் மீடியாக்களின் பார்வை இவர்கள் மீது பதியத் துவங்கியது.

இந்நிலையில் அலியா பட் குறித்து வருண் தவான் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.  '' நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால், அந்தக் காதலில் நட்பு மட்டுமே இருக்கிறது.நான் இதுவரை எந்தப்  பெண்ணுடனும் டேட்டிங் சென்றதில்லை.

'ஹம்டி ஷர்மா கி துல்ஹானியா' படத்தில் அலியா ஏற்று நடித்த காவ்யா பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது , அதே குணத்தில் எனக்கு மனைவி அமைய வேண்டும் எனவும் கூறியுள்ளார் வருண் தவான்.

அலியாவும் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் எங்களின் எண்ணங்கள் ஒத்துப் போனதால் படத்திலும் எங்களின் ஜோடி பேசப்படுகிறது'' என்கிறார் வருண் தவான்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!