வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (14/07/2014)

கடைசி தொடர்பு:17:28 (14/07/2014)

'மெட்ராஸ்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா?

வெங்கட்பிரபுவின் 'பிரியாணி' படத்திற்குப் பிறகு 'அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவரவிருக்கும் படம் 'மெட்ராஸ்'. கார்த்திக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்துள்ளார்.

'அலெக்ஸ்பாண்டியன்', 'அழகுராஜா', 'பிரியாணி' என தொடர்ச்சியாக கார்த்தியின் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் தற்போது 'மெட்ராஸ்' படத்தை மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றது படக்குழு.

 

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படம் வருகிற ஜூலை 25ம் தேதி வெளியாக இருந்தது.

இதற்காக சென்சார் சான்றிதழுக்காக சென்ற படம் போதிய ஆட்கள் இல்லாததால் படத்திற்கு சரியான நேரத்தில் சான்றிதழ் கிடைக்காமல் போகவே, தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

மேலும் 'வேலையில்லா பட்டதாரி' உள்ளிட்ட சில முக்கிய படங்கள் ஜூலையில் ரிலீஸ் ஆவதால் படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்டு 29ம் தேதிக்கு மாற்றியுள்ளார்களாம்.

வடசென்னையின் துடிப்பு மிகு இளைஞனாக நடித்துள்ள கார்த்தி இந்த படத்திற்கு சற்று அதிக உழைப்பை கொடுத்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்