'இது நம்ம ஆளு' படத்தில் டாப்ஸி நடிக்கிறாரா? | topsee, simbu, nayanthara, pandiyaraj, kuralarasan,டாப்ஸி , சிம்பு, நயன்தாரா, பாண்டிராஜ்,குறளரசன்

வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (15/07/2014)

கடைசி தொடர்பு:16:38 (15/07/2014)

'இது நம்ம ஆளு' படத்தில் டாப்ஸி நடிக்கிறாரா?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு , நயன்தாரா நடிக்கும் படம் 'இது நம்ம ஆளு' . 'வல்லவன்' படத்திற்குப் பிறகு சிம்பு -நயன் இணைந்து நடிக்கும் படம் இது. இப்படத்தின் மூலம் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

படத்தின் முக்கிய பாகங்கள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது சில காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

படத்தின் கதைப்படி இரண்டு நாயகிகள். சிம்புவின் மனைவியாக நயன்தாரா ஏற்கனவே நடித்து வரும் நிலையில் சிம்புவின் முன்னாள் காதலியாக நடிக்க பல மாதங்களாக நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் வரும் இந்த ஃபிளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு மிக முக்கியம் என்பதால் இதற்கான நடிகை தேர்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இக்கதாபாத்திரத்தில் முதலில் ஹன்சிகா நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அப்பாத்திரத்தில் நடிக்க டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கதையில் நயன்தாராவிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்குமோ அதே முக்கியத்துவம் காதலியாக வரும் நடிகைக்கும் உண்டு என்பதால் இயக்குநர் பாண்டிராஜ் இத்தனை மெனக்கெடுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close