காதலில் விழுந்த இலியானா?

சமீபகாலமாக தென்னிந்தியப் படங்களுக்கு முற்றிலுமாக முழுக்கு போட்டு விட்ட 'ஒல்லி பெல்லி' அழகி இலியானா தற்போது இந்திப் படங்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.

சயீப் அலிகானின் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஹேப்பி எண்டிங்' படத்தில் நடித்து வரும் இலியானா திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

திருமணம் என்பது புனிதமானது, இரண்டு மனங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் அந்த பந்தம் எனக்கு மிகவும் பிடிக்கும்.கண்டிப்பாக நான் என் மனம் கவர்ந்தவரை திருமணம் செய்வேன்.ஆனால் இப்போது இல்லை எனக் கூறியுள்ளார்.

 

சினிமாவில் மட்டுமே இப்போது என் கவனம் இருக்கிறது. கண்டிப்பாக உங்களிடம் சொல்லிவிட்டு தான் திருமணம் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியில் முன்னணி நாயகியாக மாற முயன்று வரும் இலியானா ஆண்ட்ரூ நீபோன் என்ற அந்த ஆஸ்திரேலிய நபருடன் அதிகமாகப் பொது இடங்களிலும் தென்படுகிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!