குயின் ரீமேக்கில் த்ரிஷா? | Queen, Trisha, குயின், த்ரிஷா

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (25/07/2014)

கடைசி தொடர்பு:15:25 (25/07/2014)

குயின் ரீமேக்கில் த்ரிஷா?

கங்கனா ரணாவத் நடிப்பில் விகாஷ் பால் இயக்கிய இந்திப் படம் 'குயின்'. படம் வெளியாகி எல்லாதரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

இதன் ரீமேக் உரிமையை இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் வாங்கினார். ஹீரோயினை மையமாகக் கொண்ட இப்படத்தில் நடிக்க ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா போன்ற பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

தற்போது இப்படத்தில் நடிக்க த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. 'குயின்' ரீமேக்கில் த்ரிஷா நடிக்க 1.20கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

த்ரிஷா நடித்த 'பூலோகம்' படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது, கௌதம் மேனன் இயக்கும் அஜித் நடிக்கும் படத்தில்  த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close