ஒரே நாளில் மோதும் விஜய், விக்ரம், விஷால் படங்கள்! | Vijay, Vikram, Vishal, Kaththi, Ai, Poojai, விஜய், விக்ரம், விஷால், கத்தி, ஐ, பூஜை

வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (26/07/2014)

கடைசி தொடர்பு:11:34 (26/07/2014)

ஒரே நாளில் மோதும் விஜய், விக்ரம், விஷால் படங்கள்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் 'கத்தி'. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் உறுதியாக தீபாவளிக்கு வெளிவரும் என படக்குழு தெரிவித்திருக்கிறது.

ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் 'பூஜை'. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த 'தாமிரபரணி' ஹிட்டானதால் 'பூஜை' படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் என்ரு விஷால் முன்ஏ அறிவித்துவிட்டார்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் படம் 'ஐ'. தமிழ் திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படத்திற்குக் காத்திருக்கிறது. இப்படத்தையும் தீபவளிக்கு வெளியிட படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் திட்டமிட்டுவருவதாக  கூறப்படுகிறது.

விஜயின் 'கத்தி' மற்றும் விஷாலின் 'பூஜை' போன்ற படங்கள் ரிலீஸ் ஆகும் அதே சமயம் விக்ரமின் 'ஐ' ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால், குறைவான திரையரங்குகளே கிடைக்கும் என்ற சிக்கல்கள் இருப்பதால் இது எந்த அளவிற்கு உண்மை என்று அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் தான் தெரியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close