சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா? | Sivakarthikeyan, Samantha, Rajini Murugan, சிவகார்த்திகேயன், சமந்தா, ரஜினி முருகன்

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (31/07/2014)

கடைசி தொடர்பு:11:30 (31/07/2014)

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா?

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்குப் பிறகு பொன் ராம் இயக்கும் படம் 'ரஜினி முருகன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.

தற்போது துரை செந்தில்குமார் இயக்கிவரும் 'காக்கிசட்டை' படத்தை முடித்துவிட்டு, 'ரஜினி முருகன்' படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் சிவா  ரியல் எஸ்டேட் புரோக்கராக நடிக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்பட்டது. சிவகார்த்திகேயன் ஜோடி தமன்னா இல்லை என்று இயக்குநர் பொன் ராம் அறிவித்தார். 

தற்போது சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். மேலும் சமுத்திரக்கனி, ராஜ்கிரண் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி வில்லன் கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close