சிவகார்த்திகேயனுக்கு ஜோடி லட்சுமிமேனன்? | சிவகார்த்திகேயன், சம்ந்தா, லட்சுமிமேனன், பொன்ராம், ரஜினி முருகன், காக்கிச்சட்டை,

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (04/08/2014)

கடைசி தொடர்பு:12:10 (04/08/2014)

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி லட்சுமிமேனன்?

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'காக்கி சட்டை' படத்தை தொடர்ந்து 'ரஜினி முருகன்' எனும் படத்தில் நடிக்க உள்ளார்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கிய பொன் ராம் இந்தப் படத்தை இயக்குகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயரிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாயின.

சமுத்திரக்கனி, ராஜ்கிரண் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் நாயகிக்கு பக்கா லோக்கலான கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது.

சமுத்திரக்கனிக்கு இதில் 'சுப்ரமணியபுரம்' படத்திற்கு பிறகு மீண்டும் வில்லன் வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

எதையும் யாரையும் ஒரு கைபார்த்து சண்டைபோடும் இந்த கதாநாயகி வேடத்துக்கு தற்போது லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ரஜினி முருகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ரியல் எஸ்டேட் புரோக்கர் வேடம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close