தனுஷை இயக்கும் துரை செந்தில்குமார்? | Dhurai Senthilkumar, Dhanush, Kathiresan, துரை செந்தில்குமார், தனுஷ், கதிரேசன்

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (05/08/2014)

கடைசி தொடர்பு:15:02 (05/08/2014)

தனுஷை இயக்கும் துரை செந்தில்குமார்?

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த், சதீஷ் ஆகியோர் நடித்த படம் 'எதிர்நீச்சல்'. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். அனிருத் இசையமைத்த இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தற்போது துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'காக்கிச்சட்டை' படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை அடுத்து துரை.செந்தில்குமார் தனுஷை இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' போன்ற படங்களைத் தயாரித்த குரூப் கம்பெனி கதிரேசன் தயாரிக்கப் போகிறாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் படக்குழுவினரிடமிருந்து வரவில்லை. விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close