எனக்கு கல்யாணம் வேண்டாம் - லட்சுமி மேனன் திடீர் முடிவு! | lakshmi menon, vishal, ajith, vijay, surya, mammooty,,லட்சுமி மேனன், விஷால், அஜித், விஜய், சூர்யா

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (09/08/2014)

கடைசி தொடர்பு:14:20 (09/08/2014)

எனக்கு கல்யாணம் வேண்டாம் - லட்சுமி மேனன் திடீர் முடிவு!

'நான் சிகப்பு மனிதன்', 'மஞ்சப்பை' , 'ஜிகர்தண்டா' என தொடர்ச்சியாக படங்கள் கொடுத்து வரும் லட்சுமி மேனன் கல்யாணம் வேண்டாம் என முடிவு எடுத்துள்ளார்.

'' சினிமாதான் என் வாழ்க்கை. கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வில் முன்னேறிய பெண்கள் பலர் அவர்கள்தான் என் இன்ஸ்பிரேஷன். எதிர்வரும் காலங்களில் நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை '' என கூறியுள்ளார் லட்சுமி மேனன்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா இவர்களுடன் இணைந்து நடிப்பதே எனது அடுத்த டார்கெட் என கூறும் லட்சுமி மேனன், விஷாலுடன் கிசுகிசுக்கப்படுவது தனக்குப் பெரிய விஷயம் அல்ல எனவும் கூறியுள்ளார்.

'' நானும் விஷாலும் இணைந்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்துள்ளோம். எனவே கிசுகிசு வருவது சாதாரணம். இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை.

அடுத்து,  மலையாளத்தில் மம்மூட்டியுடன் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அந்த வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்'' என்கிறார் லட்சுமி மேனன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close