ஒரே நாளில் மோதும் விஜய், விக்ரம், விஷால்? | vikram, vishal, vijay, kaththi,ai,poojai,,விக்ரம், விஜய், விஷால், கத்தி, ஐ,பூஜை

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (12/08/2014)

கடைசி தொடர்பு:15:08 (12/08/2014)

ஒரே நாளில் மோதும் விஜய், விக்ரம், விஷால்?

இந்த வருட தீபாவளிக்கு விஜய் , விக்ரம் , விஷால் உள்ளிட்ட மூவரின் படங்களும் ஒரே நேரத்தில் மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், சமந்தா நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் 'கத்தி' . இந்தப் படம் தீபாவளி வெளியீடு என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

தற்போது விக்ரம், எமி ஜாக்சன் நடித்து ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ஐ' படமும் தீபாவளி ரிலீஸ் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர விஷால், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஹரி இயக்கும் 'பூஜை' படமும் இதே நாளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதனால், இம்மூன்று படங்களும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close