மீண்டும் திருமணம் செய்துகொள்ள ஆசை - யுவன் அதிரடி!

'அஞ்சான்' மற்றும் 'ராஜா நட்வர்லால்' படங்களோடு சேர்த்து 102 படங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன்.

சுஜாயா சந்திரன் என்பவரை மார்ச் 21 ,2005ல் திருமணம் செய்த யுவன், கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து பெற்றார். அதற்குப் பிறகு, ஷில்பா என்பவரை செப்டம்பர் 1, 2011ல் திருமணம் செய்தார்.

அதிலும் விரிசல் ஏற்பட்டுவிட்டதாம். ஷில்பா தன் அம்மாவுடன் லண்டன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் மனக்கசப்பு என்று ஏகப்பட்ட மனக்குழப்பத்தில் இருந்தார் யுவன். இந்நிலையில் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இஸ்லாமிய மதத்தைத் தழுவிய யுவன் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சமீபகாலமாக தனிமையை சற்று அதிகமாக உணருவதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார் யுவன். யுவனின் இந்த திருமணம் குறித்த பேச்சால் சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!