இது நம்ம ஆளு தாமதம் ஏன்? சிம்பு பதில்! | idhu namma aalu, STR,nayanthara, pandiyaraj,suri, இது நம்ம ஆளு, சிம்பு, நயன்தாரா, பாண்டியராஜ், சூரி

வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (19/08/2014)

கடைசி தொடர்பு:13:41 (19/08/2014)

இது நம்ம ஆளு தாமதம் ஏன்? சிம்பு பதில்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா மற்றும் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் 'இது நம்ம ஆளு'. இப்படத்தின் படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், நேற்று படத்தின் அடுத்த ஷெட்யூலுக்கான ஷூட்டிங் தொடங்கியது. 

இந்நிலையில் படத்தின் தாமத்திற்கு என்ன காரணம் குறித்து சிம்பு பதில் அளித்துள்ளார். '' 'இது நம்ம ஆளு' எனது சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் படம். ஒருவேளை படம் பாதியில் நிறுத்தப்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது நானாகத்தான் இருப்பேன் .

எனது புதிய ஹேர் ஸ்டைல் 'இது நம்ம ஆளு' படத்தின் கிளைமாக்ஸுக்கு பொருத்தமாக இருக்கும்.  நான் 20 நாட்கள் விடுமுறையில்தான் இந்த ஹேர் ஸ்டைலில் இருந்தேன்.

படத்தின் டீஸர் வேலைகளைத் துவங்கி விட்டோம். விரைவில் டீஸர் உங்களைத் தேடி வரும்'' என்கிறார் சிம்பு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close