மீண்டும் தள்ளிப்போகிறதா மெட்ராஸ்? | karthi, madras, catherene teresa, ranjith, கார்த்தி, மெட்ராஸ், கேத்ரீன் தெரசா, ரஞ்சித்,

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (20/08/2014)

கடைசி தொடர்பு:16:28 (20/08/2014)

மீண்டும் தள்ளிப்போகிறதா மெட்ராஸ்?

கார்த்தி, கேத்ரீன் தெரசா நடிப்பில் வெளிவரக் காத்திருக்கும் படம் 'மெட்ராஸ்'. 'அட்டகத்தி' இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் 'மெட்ராஸ்' ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக சொல்லப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் பட வெளியிடலாம் என முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக கார்த்தியின் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில் இந்தப் படம் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருப்பதாலே இந்த முடிவு எனவும், படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close