மீண்டும் உதயநிதியுடன் நடிக்கும் ஹன்சிகா? | உதயநிதி, ஹன்சிகா, அஹமத், udhayanidhi, hansika, ahmed

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (26/08/2014)

கடைசி தொடர்பு:12:35 (26/08/2014)

மீண்டும் உதயநிதியுடன் நடிக்கும் ஹன்சிகா?

'வாமனன்', 'என்றென்றும் புன்னகை' என இரண்டு படங்களையும் இயக்கிய அஹமத் உதயநிதி நடிக்கும் மூன்றாவது படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர்வைக்கவில்லை.

இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருக்கிறாராம். ராஜேஷ் இயக்கிய  'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்தார். அஹமத் இயக்கும் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக உதயநிதியுடன் ஜோடி சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஹன்சிகா 'ரோமியோ ஜூலியட்', 'வாலு', 'அரண்மனை', 'மீகாமன்', 'ஆம்பள' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

உதயநிதி 'நண்பேன்டா' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் அஹம்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அக்டோபர் மாதத்தில் அஹமத் பட ஷூட்டிங் தொடங்க உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close