செப்டம்பர் 18ல் கத்தி இசை வெளியீடு? | Kaththi, Vijay, Samantha, Anirudh, ARMurugadoss, கத்தி, விஜய், சமந்தா, அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (26/08/2014)

கடைசி தொடர்பு:12:47 (26/08/2014)

செப்டம்பர் 18ல் கத்தி இசை வெளியீடு?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் 'கத்தி'. இப்படத்திற்கு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை வெளியிடுவதில் பல சிக்கல்கள் நிலவிவரும் நிலையிலும், தீபாவளிக்கு கண்டிப்பாக 'கத்தி' வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தின் இசை செப்டம்பர் 18ம் தேதி வெளிவரப் போவதாக கூறப்படுகிறது. 'துப்பாக்கி', 'தலைவா', 'ஜில்லா' படங்களைப் போலவே இந்தப் படத்திலும் விஜய் ஒரு பாடலைப் பாடியிருப்பதால் ரசிகர்கள் 'கத்தி' படப் பாடல்களை மிக ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா லண்டனில் வெளியாக உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது சென்னையிலேயே வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close