மீண்டும் படம் இயக்கும் பாரதிராஜா! | Bharathiraja, YuvanSahnkarRaja, Manoj, SigappuRojaakkal, பாரதிராஜா, யுவன்ஷங்கர்ராஜா, மனோஜ், சிகப்புரோஜாக்கள்

வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (26/08/2014)

கடைசி தொடர்பு:14:52 (26/08/2014)

மீண்டும் படம் இயக்கும் பாரதிராஜா!

'அன்னக்கொடி' படத்தின் தோல்விக்குப் பிறகு படம் இயக்காமல் இருந்த பாரதிராஜா மீண்டும் படம் இயக்க முடிவு செய்துள்ளார். தாத்தா மற்றும் பேரனுக்கு இடையே உள்ள பாசத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தை இயக்குவதுடன் அதில் நடிக்கவும் இருக்கிறார் பாரதிராஜா. இப்படத்திற்கு முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைய இருக்கிறார் பாரதிராஜா.

'அன்னக்கொடி' படத்துக்காக பாரதிராஜா ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து  கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கிய 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம். இதை பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் இயக்கப் போகிறாராம்.

மேலும், அகத்தியன் இயக்க உள்ள ஒரு படத்தையும் பாரதிராஜா தயாரிக்கப் போகிறாராம். இது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close