கீதாஞ்சலி செல்வராகவன் இயக்குநர் ஆகிறார்! | Gitanjali Selvaraghavan, MalaiNerathuMayakkam, கீதாஞ்சலி செல்வராகவன், மாலை நேரத்து மயக்கம்

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (26/08/2014)

கடைசி தொடர்பு:15:19 (26/08/2014)

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்குநர் ஆகிறார்!

தமிழ் சினிமாவில் தற்போது பெண் இயக்குநர்களின் வரவு சற்று அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். அந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன்.

இவர் செல்வராகவன் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்பு செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தொடங்கிய படம் ' மாலை நேரத்து மயக்கம்'. பின்னர் அப்படம் பாதியில் கைவிடப்பட்டது. தற்போது இப்படத்தை கீதாஞ்சலி இயக்கப் போகிறாராம்.

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்க்கலாம்.

'3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close