அக்டோபர் 2ல் எஸ்.ஜே.சூர்யாவின் இசை ரிலீஸ்? | Isai, SJSurya, Savithri, இசை, எஸ்.ஜே.சூர்யா, சாவித்ரி

வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (27/08/2014)

கடைசி தொடர்பு:11:48 (27/08/2014)

அக்டோபர் 2ல் எஸ்.ஜே.சூர்யாவின் இசை ரிலீஸ்?

எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து, நடிக்கும் படம் 'இசை'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் சத்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா ஆகியோரும்  நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், படம் வெளிவரவில்லை.

'படத்திற்குத் தேவையான சில விஷயங்களை செய்யவேண்டி இருந்ததால் இவ்வளவு தாமதமாகிவிட்டது' எனக் கூறினார் படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா.

ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட்29ம் தேதியும், படத்தின் இசை செப்டம்பர் மாதத்திலும், படம் அக்டோபர் 2ம் தேதியும் வெளியாக உள்ளதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close