வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (05/09/2014)

கடைசி தொடர்பு:15:05 (05/09/2014)

ஹாரர் படத்தில் அருள்நிதி?

’ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்திற்குப் பிறகு அருள்நிதி நடித்திருக்கும் படம் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ . இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஶ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி விட்டது. விரைவில் படத்தின் இசை வெளியாகவுள்ளது.

அருள்நிதி அடுத்து நடிக்க இருக்கும் படம் ஹாரர் படமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸின் இணை இயக்குநர் அஜய் இந்த ஹாரர் படத்தை இயக்க உள்ளார். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

ஹீரோயின் உட்பட மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்