'கெத்து' காட்டும் உதயநிதி! | உதயநிதி, கெத்து, திருக்குமரன், இமான், சுகுமார் udhayanidhi, gethu, thirukumaran, imman, sugumar,

வெளியிடப்பட்ட நேரம்: 11:56 (08/09/2014)

கடைசி தொடர்பு:11:56 (08/09/2014)

'கெத்து' காட்டும் உதயநிதி!

ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி, சந்தானம், நயன்தாரா நடித்து வரும் படம் 'நண்பேன்டா'. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஹமதுவின் படத்தில் உதயநிதி நடிக்க உள்ளார். இப்படத்துக்கு 'இதயம் முரளி' என்று டைட்டில் பரிசீலனையில் இருக்கிறது.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து 'மான்கராத்தே' திருக்குமரன் இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதி நடிக்கிறார்.

இப்படத்துக்கு 'கெத்து' என்று டைட்டில் வைத்துள்ளனர். இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோயின் யார் என்பதை இன்னும் முடிவிசெய்யவில்லையாம்.

உதயநிதி 'கெத்து' காட்டுவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close