நிழல் குறும்பட பயிற்சிப் பட்டறை! | நிழல் குறும்பட பயிற்சிப் பட்டறை, nizhal shortfilm workshop

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (08/09/2014)

கடைசி தொடர்பு:15:10 (08/09/2014)

நிழல் குறும்பட பயிற்சிப் பட்டறை!

நிழல் திரைப்பட இதழ் ஓர் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. 1994ம் ஆண்டு முதல் இன்று வரை 420 கிராமங்களில் உலகப் புகழ் பெற்ற செவ்வியல் படங்கள், குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை திரையிட்டு, எது நல்ல சினிமா என்பதை பார்வையாளர்களே உணரும்படி செய்து வருகிறது.

தமிழகத்திலுள்ள 30 மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறை நடத்தி, சாதாரண கிராமப்புற இளைஞனுக்கும் திரைப்பட தொழில்நுட்பத்தைக் கற்று கொடுத்துள்ளது. 5000க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சிப் பட்டறை மூலம் பலன் அடைந்துள்ளனர்.

பலர் இன்று திரைப்படத் துறையிலும், குறும்படத் துறையிலும் பணியாற்றி வருகின்றனர். குறும்படம் மற்றும் ஆவணப்படத் துறை பற்றிய புரிதலை லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கொண்டு சென்றுள்ளது.

நிழல் 35வது குறும்படப் பயிற்சிப் பட்டறையை சேலம் பெரிய புத்தூர் அருகில் உள்ள அழகாபுரம் புத்திர கவுண்டர் கல்யாண மஹாலில் செப்டம்பர் 18முதல் 23வரை நடத்த உள்ளது.

கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக் கல்வியை கிராமப்புற மாணவர்களும் பெற வேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா ,திரைக்கதை ,படத்தொகுப்பு ,ஒளி அமைப்பு ,நடிப்பு முதலியவை கற்றுத் தரப்படுகிறது.

இறுதி நாள் மாணவர்களே குறும்படம் எடுக்கும் அளவுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பட்டறையில் 50 குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களும், உலகப் புகழ் பெற்ற ஏழு திரைப்படங்களும் திரையிடப்படும். உணவு ,உறைவிடம் மற்றும் பயிற்சிக் கருவிகளுக்கு கட்டணம் உண்டு.
 
பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு  ;
ப.திருநாவுக்கரசு ,
31/48 ராணி அண்ணா நகர்  ,
கே.கே.நகர்,
சென்னை - 78
மொபைல் எண்: 94444 84868
மின்னஞ்சல்: arasunizhal @gmail..com  
இணையதளம்: www .nizhal.in

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close