வாலு படத்தின் தாமதத்துக்கு நான் பொறுப்பல்ல - ஹன்சிகா! | hansika, simbu, str, vaalu, சிம்பு, ஹன்சிகா, வாலு,

வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (16/09/2014)

கடைசி தொடர்பு:14:49 (16/09/2014)

வாலு படத்தின் தாமதத்துக்கு நான் பொறுப்பல்ல - ஹன்சிகா!

தமிழ் , தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. தற்போது ’வாலு’ படம் குறித்து பதில் கூறியுள்ளார். 

என்னால் முயன்ற அளவுக்கு ‘வாலு’ படத்திற்கு  ஒத்துழைப்பு கொடுத்துவிட்டேன். ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டியுள்ளது. ’வாலு’ படத்திற்கு எனக்கு 60 நாட்கள் கால்ஷீட் என ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனாலும் நான் 80 நாட்கள் நடிக்க வேண்டியிருந்தது. 

அதைக்கூட நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, கடந்த செப்டம்பர் 7 முதல் 9ம் தேதி வரை பாடல் காட்சிக்காக ஒதுக்கினேன். ஆனால்,  அவர்கள் அதைப் பயன்படுத்தவில்லை. இப்போது அடுத்தடுத்து எனது படங்களுக்கான படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டேன். 

இந்நிலையில், இன்னும் நான் ‘வாலு’ படத்திற்காக எனது நாட்களை ஒதுக்கினால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்.

என்னால் முடிந்த அளவு ‘வாலு’ படத்திற்காக நான் வேலை செய்து விட்டென். இனி யாரும் ‘வாலு’ ரிலீஸ் தள்ளிப்போவதற்கு நான் தான் காரணம் என சொல்லக்கூடாது ''  என கூறியுள்ளார் ஹன்சிகா. 

சில தினங்களுக்கு முன்பு ‘வாலு’ படம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என சிம்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close