ரஜினியும், மகேஷ் பாபுவும் சேர்ந்து நடிப்பார்களா? | ரஜினி, ரஜினிகாந்த், மகேஷ்பாபு, தமிழ், தெலுங்கு, மல்டி ஸ்டார் படம், சேர்ந்து நடிப்பார்களா? , சூரிய நாராயண பாபு.

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (25/09/2014)

கடைசி தொடர்பு:17:47 (25/09/2014)

ரஜினியும், மகேஷ் பாபுவும் சேர்ந்து நடிப்பார்களா?

ரஜினியும், மகேஷ் பாபுவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்பதுதான் டோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.

மகேஷ் பாபுவின் நெருங்கிய உறவினர் சூரிய நாராயண பாபு . இவர் தமிழ், தெலுங்கில் ஒரு மல்டி ஸ்டார் படத்தைத் தயாரிக்கிறாராம். அதில்தான் ரஜினியும், மகேஷ் பாபுவும் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.

இதுகுறித்து, சூரிய நாராயண பாபு ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ரஜினியை சந்தித்துப் பேசினாராம். பேச்சுவார்த்தை மட்டும் நடந்திருக்கிறது. ஆனால், எதுவும் உறுதி செய்யப்படவில்லையாம்.

ரஜினி 'லிங்கா' படத்துக்குப் பிறகு ஈராஸ் நிறுவனத் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் 2016 மே வரை ரஜினி பிஸி.

மகேஷ் பாபு தற்போது ஸ்ருதி ஹாசனுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்தப் படங்களை முடித்துவிட்டு இருவரும் இணைவது சாத்தியம் என்றால் அது 2016 இறுதியில்தான் நடக்குமாம். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close