இந்தியா-பாகிஸ்தான் காமெடிப் படமா? | விஜய் ஆண்டனி, இந்தியா-பாகிஸ்தான்,

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (26/09/2014)

கடைசி தொடர்பு:15:50 (26/09/2014)

இந்தியா-பாகிஸ்தான் காமெடிப் படமா?

’நான்’, ‘சலீம்’ படங்களுக்கு கிடைத்த வரவேற்பால் இசைப்பணியை பகுதி நேரமாக மாற்றிவிட்டு முழுநேர நடிகராக மாறிவிட்டார் விஜய் ஆண்டனி.

தற்போது இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு  ‘ இந்தியா பாகிஸ்தான்’, ‘சைத்தான்’, ’சலீம் -2’ உள்ளிட்ட மூன்று படங்களில் விஜய் ஆண்டனி நடிக்கிறார் .

இவற்றில் ’இந்தியா- பாகிஸ்தான் ‘ படத்தின் காட்சிகள் பெரும்பாலும் எடுத்து முடித்துவிட்டார்கள்.  இன்னும் 15 நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடக்க  உள்ளது.

‘இந்தியா -பாகிஸ்தான்’ என சீரியஸ் டைட்டில் என்றாலும் படம் முழுக்க  ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை ஆனந் இயக்குகிறார்.

சைலன்ட் கில்லர் போன்ற தோற்றத்தில் சுற்றி வந்த விஜய் ஆண்டனிக்கு ’இந்தியா- பாகிஸ்தான்' காமெடிப் படம் என்பதால் விந்தியாசமான படமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close