ஆஃப் த ரெக்கார்டு! | ஆஃப் த ரெக்கார்டு!, மதுபான நடிகர், பன்ச் நடிகர், காமெடி நடிகர், அடுக்குமொழிக்காரர், விரல் நடிகர், புத்த இயக்குநர், அக்கட மாநில நடிகை, காமெடி ஹீரோ

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (27/09/2014)

கடைசி தொடர்பு:11:42 (27/09/2014)

ஆஃப் த ரெக்கார்டு!

 கடைசி வரை அந்த அயல்நாடு நடிகருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முடியாத நிலையில், அகஸ்மாத்தாக தான் எடுத்துக்கொண்ட போட்டோவை பிரகாச நடிகர் பத்திரிகைகளுக்கு அனுப்பியதால், முகம் சுளித்தாராம் மதுபான நடிகர்!

 பன்ச் நடிகரின் படத்தை மேலிட டி.வி வாங்கி விட்டதாக ஒரு செய்தியைக் கிளப்பி எதிர்ப்புகளை சமாளிக்க ஒரு முயற்சி நடந்தது. விஷயம் அறிந்த டி.வி இப்போதைக்கு அந்தப் படத்தைத் தள்ளிவைப்போம் என்று முடிவுசெய்துவிட்டதாம்!

 அண்மையில் நடந்த ஒரு படத்தின் விழாவில் பேசிய அடுக்குமொழிக்காரர், 'என்கிட்டே 1,000 ரூபாய்க்கு நடிச்சவன் எல்லாம் இன்னிக்கு கோடி ரூபாய் கேட்கிறான் தயாரிப்பாளரை'' என்று பேர் சொல்லாமல் போட்டுக் கிழித்துவிட்டார். அவர் சொன்னது காமெடி நடிகரைத்தானாம்!

 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் காரிடாரில் யாரோ இரண்டு பேர் அரை இருட்டில் முத்தமிடும் வீடியோவைப் போட்டு அது விரல் நடிகரும் அக்கட மாநில நடிகையும் என்று சிலர் கிளப்பிவிட்ட செய்தி கேட்டு நடிகை கடுப்பில் இருக்க, நடிகர் சிரிக்கிறாராம்!

 டைட்டில் உறுதியானாலும் ஓரெழுத்துப் படம் பற்றிய ஆரவாரம் அடங்கும் வரை அதை வெளியிட வேண்டாம் என்று ஹீரோவிடமிருந்து ஆலோசனை வந்ததால், அமைதியாக இருக்கிறாராம் புத்த இயக்குநர்!

 ஒல்லிப்பிச்சான் தயாரிக்கும் அடுத்த படத்தில் சூது நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் ஒல்லிப் பிச்சானுக்கும் காமெடி ஹீரோவுக்கும் போன் கான்டாக்ட், ட்விட்டர் வாழ்த்துகள் எல்லாம் முற்றிலும் நின்றுவிட்டதாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close