இது நம்ம ஆளு படத்தில் சிம்புவின் பன்ச்! | சிம்பு, நயன்தாரா, சந்தானம், இது நம்ம ஆளு படத்தில் சிம்புவின் பன்ச்!

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (06/10/2014)

கடைசி தொடர்பு:17:28 (06/10/2014)

இது நம்ம ஆளு படத்தில் சிம்புவின் பன்ச்!

’பசங்க’ படத்தை இயக்கிய பாண்டியராஜ் அடுத்து எடுத்து வரும் படம் ‘இது நம்ம ஆளு’ . சிம்பு, நயன்தாரா, சந்தானம் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளன.

இரண்டு வருடங்களாக சிம்பு நடிப்பில் ஒரு படமும் வெளியாகாமல் இடையில் ஓரிரு படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்தார் சிம்பு.

இந்நிலையில் ‘வாலு’ மற்றும் இது நம்ம ஆளு’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.மேலும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு இளைஞர்களை கவரும் விதமாக ஒரு பன்ச் டயலாக்கும் பேசியுள்ளார்.

"நூறு பொண்ண கரெக்ட் பண்றது ஈஸி, ஆனா ஒரு பொண்ண மெயின்டெய்ன் பண்றதுதான் கஷ்டம்' என்பது தான் சிம்பு பேசியிருக்கும் அந்த பன்ச்.

இந்த டயலாக் சிம்புவின் வாழ்க்கைக்கும் சற்றே பொருந்திப் போவதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசு கிசுத்து வருகின்றன. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close