சன்னி லியோனால் தொடரும் ‘ஏ’ படங்கள்! | sunny leone, current theega, சன்னி லியோன், கரண்ட் தீகா

வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (21/10/2014)

கடைசி தொடர்பு:14:37 (21/10/2014)

சன்னி லியோனால் தொடரும் ‘ஏ’ படங்கள்!

சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆடியதால்  தெலுங்கு படம் ஒன்றிற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. ’கரன்ட் தீகா’ என்ற அந்த படத்தில் எந்த வன்முறை காட்சியோ ஆபாசமோ கிடையாது. வெறும் அந்த ஒரு பாடலில் மட்டும் சன்னி லியோன் வருவதாலேயே சென்சார் ஏ கொடுத்துவிட்டதாம்.

”இந்த படம் காமெடி கதைதான். இருந்தாலும் சன்னி லியோன் நடித்திருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஏ சர்டிபிகேட் கிடைத்திருப்பதும் படத்துக்கு பிளஸ்தான்” என சந்தோஷப்படுகிறாராம் தயாரிப்பாளர் லட்சுமி மன்சு. இவரது சகோதரர் மனோஜ் மன்சுதான் இதில் ஹீரோ. ராகுல் பிரீத் சிங் ஹீரோயின். ஜெகபதி பாபுவுக்கு மெயின் ரோல்.

இதற்கு முன் சில இந்தி படங்களிலும் சன்னி ஒரு பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். அந்த பாடல்களாலும் படத்துக்கே ஏ சர்டிபிகேட் கிடைத்துவிட்ட சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது.

இளம் ரசிகர்களை ஈர்க்க தயாரிப்பாளர்களே அடல்ட் ஒன்லி சர்டிபிகேட் கேட்டு வாங்கும் நிலையும் இருப்பதாக சினிமா துறையினர் சொல்கிறார்கள்.

’கரென்ட் தீகா’ பட விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறதாம். இந்த படம், ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் ரீமேக் என்பது தமிழ் இண்டஸ்ட்ரிக்கு கூடுதல் செய்தி. அப்போ ப்ளூ கலரு ரிப்பன் ரெட் ஆயிடுச்சா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close