'தல 56' படத்தில் அஜித் ஜோடி யார்? | அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்? , சிவா, சமந்தா, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, வெற்றி, தேவி ஶ்ரீ பிரசாத் , சில்வா, காசி விஸ்வநாதன், அஜித், தல , தல 56, அஜித் 56

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (24/10/2014)

கடைசி தொடர்பு:15:55 (24/10/2014)

'தல 56' படத்தில் அஜித் ஜோடி யார்?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிக்கும் 'தல 55' படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

விரைவில் படத்தின் டைட்டில், டீஸர், இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, 'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இது அஜித்தின் 56வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

'வீரம்' படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்புதிய  படத்திலும் பணியாற்ற உள்ளனர். படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ள 'தல 56' படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

காசி விஸ்வநாதன் எடிட்டிங் பணிகளை கவனித்துக் கொள்வாராம். சில்வா சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

சமந்தா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் ஆகிய மூவரில்; ஒருவர் ஹீரோயினாக நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close