ஆஃப் த ரெக்கார்டு! | ஆஃப் த ரெக்கார்டு, விஜய், அனிருத், செல்வமணி, ரோஜா, ஐ, ஷங்கர், சந்தானம், அனுஷ்கா, கிசுகிசு,

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (24/10/2014)

கடைசி தொடர்பு:18:35 (24/10/2014)

ஆஃப் த ரெக்கார்டு!

  செம்பருத்தி தம்பதிக்கு சொந்தமான வீட்டில் எம்.எம்.டி.ஏ விதிமுறைகளை மீறி ஒரு மாடி அதிகம் கட்டி இருக்க, போக வேண்டிய இடத்துக்கு ஸ்ட்ராங்கான புகார் போய் இருக்கிறதாம். எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று சினிமா செல்வாக்கின் மூலம் கணவரும் அரசியல் செல்வாக்கின் மூலம் மனைவியும் முயற்சிக்கின்றார்களாம்!

 பன்ச் நடிகர் பட டீசருக்கு இசையமைப்பாளர் அமைத்திருக்கும் இசை ஒரு வெளிநாட்டு மியூசிக் ஆல்பத்திலிருந்து சுடப்பட்டதை இணை யத்தில் வெட்ட வெளிச்சமாக பலரும் வெளிச்சம் போட்டுக்காட்ட  தலையில் அடித்துக்கொண்டாராம் ஹீரோ!

 பிரமாண்ட ஓரெழுத்துப் படத்தின் பட்ஜெட் 150 கோடி என்று தயாரிப் பாளர் சொல்லிக்கொண்டு இருக்க,  பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த இயக்குநர் 'மொத்த பட்ஜெட்டே 100 கோடிக்கும் கம்மிதான்'' என்று போட்டு உடைத்ததில் ஆடிப்போயிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு!

 ஹீரோவான காமெடி நடிகர் தனது அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க முடியுமா என்று உயர நாயகியிடம் கேட்டு முடிப்பதற்குள் முகத்தில் அடித்தது போல நோ என்று பதில் வர, கலாய்க்கவே தெம்பில்லாமல் கப்சிப் ஆனாராம் நடிகர்!

 வாய்ப்புகள் இல்லாததால் குத்தாட்டத்துக்கு இறங்கிவிட்டார் முழுமையான நடிகை. ஒரு படத்தில் கவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்க, ஷூட்டிங்குக்கு வந்த ரசிகர்கள் அடித்த மோசமான கமென்ட்டுகளால் அழுதுகொண்டே கேரவனுக்குள் நுழைந்துவிட்டார். வாய்ப்புகள் இல்லையென்றாலும் இனி குத்தாட்டம் போடுவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close