ஆர்யா படத்தில் அஜித் கெஸ்ட் ரோல் ? | vishnuvardhan, arya, krishna, ajith, விஷ்ணுவர்தன், ஆர்யா, கிருஷ்ணா, அஜித், யட்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (25/10/2014)

கடைசி தொடர்பு:14:35 (25/10/2014)

ஆர்யா படத்தில் அஜித் கெஸ்ட் ரோல் ?

ஸ்ரீதேவி நடித்த 'இங்லீஷ் விங்லீஷ்' படத்தில் நட்புக்காக ஒரு சிறிய ரோலில் நடித்தார் அஜித். அதே பாணியில் தற்போது ஆர்யா படத்திலும் அஜித் ஒரு காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தற்போது ஆர்யா - கிருஷ்ணா நாயகர்களாக நடித்து வரும் படம் 'யட்சன்'. இப்படத்தை இயக்குகிறார் விஷ்ணுவர்தன். 

'யட்சன் ' படத்தில் ஆர்யா, அஜித்தின் ரசிகராக நடிப்பதால் ஒரு காட்சியில் அஜித்தே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய விஷ்ணுவர்தன் இதுபற்றி அஜித்திடம் சொன்னாராம்.

கௌதம் மேனன் படத்தில் பிஸியாக இருக்கும் அஜித் அதை முடித்து விட்டு 'யட்சன்' படத்தில் நடிக்கிறேன் என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close