’தல 56’ படத்தை தயாரிக்கப்போவது யார்? | ajith, veeram, siva, aarambam, thala 55, ajith, gautham menon, அஜித், வீரம், சிவா, கௌதம் மேனன், தல 55, ஆரம்பம்

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (29/10/2014)

கடைசி தொடர்பு:12:58 (29/10/2014)

’தல 56’ படத்தை தயாரிக்கப்போவது யார்?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படம் முடிந்தவுடன் மீண்டும் ‘வீரம்’ சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். ’வீரம்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இப்படத்தில் சந்தானமும் நடிக்க உள்ளார்.

படத்தின் நாயகியாக சமந்தா, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா என பெயர் அடிபட்டு வரும் நிலையில் அதற்கான தேர்வு இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில், படத்தை தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

’ஆரம்பம்’ , ‘தல 55’ படங்களின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கலாம் என ஒரு பக்கம் தகவல்கள் வெளியானாலும், மற்றொரு பக்கம் 'வீரம்' படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் அஜித் படத்தைத் தயாரிக்க ஆர்வமாக உள்ளதாம்.

பிவிபி நிறுவனமும், ஏஜிஎஸ் நிறுவனமும் இந்த ரேஸில் உள்ளன.  'தல56' படத்தைத் தயாரிக்கபோவது யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close