மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா யுவன் ?

மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதுதான் இணையத்தில் பரவிவரும் தற்போதைய வைரல். 

முதல் மனைவி இந்து. இரண்டாவது கிறிஸ்துவ மனைவி. இப்போது முஸ்லிம் மனைவியை நிக்கா செய்ய இருக்கிறார். நேற்று நிச்சயதார்த்தம்கூட முடிந்துவிட்டது என்ற தகவலால் டாக் ஆஃப் தி டவுன் ஆகியிருக்கிறார் யுவன்.

யுவன், 2005-ல் லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவைத் திருமணம் செய்தார். இவரிடம் விவாகரத்து பெற்று, பின்னர் ஷில்பா மோகன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதுவும் நிலைக்காததால், மனம் வெறுத்த யுவன், பின்பு முஸ்லிமாக மதம் மாறியது அனைவருக்கும் தெரியும்.‘‘யுவனைப் பற்றிய இந்தக் களேபரங்கள் அனைத்தும் உண்மைதானா?’’ என்று யுவனின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான ராமிடம் போனில் கேட்டோம்.

‘‘நீங்கள் சொல்வது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. என் ‘தரமணி’ படத்துக்கு அவர்தான் மியூசிக் டைரக்டர். என்னுடைய பாடல்களே இன்னும் பாக்கி இருக்கும் நிலையில், நான் யுவனைப் பார்த்தே ஒரு மாதமாகிறது. அப்படி எதுவும் இருந்தால், என்னை நிச்சயம் அழைத்திருப்பார். தகவல் வந்தால் சொல்கிறேன்!’’ என்று சொல்லி போனை கட் செய்தார்.

இதுவரையிலும், யுவன் மூன்றாவது திருமணம் செய்துகொள்வது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளிவரவில்லை.

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!