நவம்பர் 9ல் 'லிங்கா' இசை வெளியீடு!

கே.எஸ்.ரவிகுமார், ரஜினிகாந்த்,ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘லிங்கா’. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரண்டு நாயகிகள்.

'லிங்கா' படத்தின் இசை வெளியீடு நவம்பர் 9ல் நடக்கிறது. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ல் 'லிங்கா' படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

படத்தின் அறிமுகப் பாடலுக்காக சீனாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மகாவ்விலும் மற்றும் இப்பாடலுக்கான இதர காட்சிகளை அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற பகுதிகளிலும் படமாக்க உள்ளனர்.

இதை முடித்துவிட்டு விரைவில் இந்தியா திரும்பும் படக்குழு இசை வெளியீடு மற்றும் டீஸர் வெளியீட்டுப் பணிகளைப் துவக்க உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!