இரட்டை வேடங்களில் நடிக்கும் கார்த்தி?

’மெட்ராஸ்’ வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி தற்போது 'கொம்பன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். லட்சுமி மேனனுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் கார்த்தி இந்தப் படத்திற்கு பிறகு கோகுல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

கோகுல் 'ரௌத்திரம்',  ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய இரு படங்களையும் இயக்கியவர்.  தற்போது கார்த்தியின் நடிப்பில் ‘கஷ்மோரா’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

’கஷ்மோரா’ என்றால் என்ன என்று கேட்டால் அது ஒருவரின் பெயர் . இந்த பெயரின் காரணம் படத்தில் தெரியவரும் என ரகசியம் காத்து வருகிறார் இயக்குநர் கோகுல். 

காமெடியை பிரதானமாக வைத்து எடுக்கப்பட உள்ள இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.  மேலும் கார்த்திக்கு இதில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.

பசுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் 2015 துவக்கத்தில் ஆரம்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

’மெட்ராஸ்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக சந்தோஷ் நாராயணன் கார்த்தி படத்திற்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!