கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா?

சமீபத்தில் த்ரிஷாவிற்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இடையில் நிச்சயம் நடந்ததாக தகவல் வெளியானது. அதை மறுக்கும் விதமாக த்ரிஷா, '' நிச்சயம் என்றால் முதலில் என்னிடம் இருந்துதான் தகவல் வரும் '' என ட்விட் செய்தார். 

எனினும் நிச்சயம் நடக்கவில்லை என்று மட்டுமே கூறினாரே தவிர வருண் குறித்து தகவல்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.

தற்போது இந்த நிச்சயம் குறித்து சில பிரபலங்களே மறைமுகமாக இதை ஏன் மறைக்க வேண்டும் என ட்விட்டரில் அரசல் புரசலாகப் பேச, அதற்கு த்ரிஷா பதில் கூறியுள்ளார்.

'' எனது நிச்சயம் மற்றும் சொந்த வாழ்க்கை குறித்து பேசும் போது எனக்கே போர் அடிக்கிறது. வேறு ஏதாவது பேசுங்கள்.

நிச்சயம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அதை எந்த பெண்ணும் மறைக்கமாட்டாள். மேலும், ரகசியத் திருமணம் செய்து கொள்ளும் அவசியமும் எனக்கில்லை என கூறியுள்ளார். 

இதில் இரு குடும்ப விஷயங்கள் அடங்கியுள்ளது. எனது நண்பராக நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ அது.

வருணைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். மேலும், இதுபற்றி இவ்வளவு சீக்கிரம் பேசவேண்டாம் என கூறியுள்ளார் த்ரிஷா. 

இறுதியாக, 'கல்யாணம் பண்ணவேண்டும் என்று எனக்கு தோன்றும் போதுதான் நான் செய்துகொள்வேன்' என த்ரிஷா கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!