வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (27/12/2014)

கடைசி தொடர்பு:14:40 (27/12/2014)

விஜய் சேதுபதி படத்தில் சிவகார்த்திகேயன்?

’போடா போடி’ இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் படம் ‘நானும் ரௌடிதான்’. படத்திற்கு இசை அனிருத். 

இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் . இவர் ‘கத்தி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர்.

 

ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக நெருங்கிய வாட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. 

ஒருவேளை சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் ஆச்சர்யமில்லை. தனுஷ் தயாரிப்பு, அனிருத் இசை என்ற ரீதியில் அதற்கு வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்