ஆஃப் த ரெக்கார்டு!

 பழைய காதல் ஜோடி நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் ஒல்லி நடிகரை ஒரு பாடல் பாடவைக்கலாம் என ஐடியா கொடுத்தாராம் ஹீரோ. இயக்குநரும் பப்ளிசிட்டி பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அணுக, ஸ்டிரிக்ட்டாக நோ சொல்லிவிட்டாராம் ஒல்லி!

 ‘கோட் சூட் நடிகருடன் நடிப்பதுதான் என் லட்சியம்’ என தெரிவித்திருக்கிறார் வெள்ளைக்கார நடிகை. அதற்கு ‘அப்படி என்னத்த அவர் நடிச்சிட்டாரு?’ என நடிகைக்கு கடுப்பு மெசேஜ் தட்டிவிட்டாராம் மதுபான நடிகர்!

தடாலடியான சம்பளம் கேட்டுத் தயாரிப்பாளர்களை மிரள வைக்கிறாராம் ஸ்வீட் ஸ்டால் நடிகை. சமீபத்தில் கறுப்பு நடிகர் படத்தில் ஜோடியாக நடிக்க அணுகியபோது கேட்ட சம்பளம் 2.5 கோடியாம்!

தொடர் தோல்விகளை அடுத்து இனி தனக்கு ஓரளவு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்திருக்கிறாராம் வசந்தம் நடிகை!

சம்பள விஷயத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை தன் தாயிடம் விட்டுவிட்டாராம் ரிப்பன் நடிகை. அம்மாவோ ‘என் மகளோட ரேஞ்ச் என்ன? நீங்க கொடுக்கிற சம்பளம் என்ன?’ என அத்தனை தயாரிப்பாளர்களிடமும் ஓவர் டார்ச்சர் செய்கிறாராம்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!