ஆஃப் த ரெக்கார்டு! | ஆஃப் த ரெக்கார்டு , Off The Record

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (13/01/2015)

கடைசி தொடர்பு:19:25 (13/01/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

புத்த இயக்குநரின் புதிய படத்தில் ஹீரோவின் வாழ்வில் மூன்று காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்கள்தான் கதையாம். படத்தின் இறுதியில் ஹீரோ இறந்து விடுவது போல கதையை அமைத்துள்ளாராம் இயக்குநர். கோட் நடிகருக்கே படம் முடியும்போதுதான் இந்த சேதி தெரிய வந்ததாம்!

தெலுங்கில் குட்டிக் குட்டி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த 'ஆனந்தமான’ ஹீரோயின், தமிழில் நடித்த 'யானை’ இயக்குநரின் சுனாமிப் படம் தனக்கு பெரிய இடத்தைப் பெற்றுத் தரும் என்று ரொம்பவே நம்பினாராம். படம் சறுக்கியதில் அம்மணி அப்செட்!

தாங்கள் நடிக்கும் படங்களில் 'பரோட்டா’ காமெடியனுக்கு இயக்குநர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், கடும் அதிருப்தியில் இருக்கிறார் களாம் இளம் ஹீரோக்கள். அதில் சமீபத்தில் வெளியான இரண்டு 'வி’ ஹீரோக்களின் படங்களும் அடக்கம்.

டைத்தெரு நடிகை, நச் நடிகையோடு நெருக்கம் காட்டிய வெற்றி நடிகர் இப்போது தனது பலமான படத்தில் நடித்துவரும் பாடகி நடிகையிடம் நெருக்கம் காட்டிவருகிறாராம். இருவரின் நெருக்கத்தாலும் படப்பிடிப்புத் தளம் இந்தக் குளிரிலும் சூடாகக் காணப்படுகிறதாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close