ரஜினியைத் தொடர்ந்து விஜய்? | விஜய், புலி, அட்லீ, vijay, puli

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (22/01/2015)

கடைசி தொடர்பு:14:38 (22/01/2015)

ரஜினியைத் தொடர்ந்து விஜய்?

ஜாக்மைக்கேல் மற்றும் ஹரிணி நடிப்பில் அப்சரா ராம்குமார் இயக்கத்தில் வெளிவர உள்ளத் திரைப்படம் 'ஒண்ணுமே புரியல'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியான எ.ஆர்.ரிஹானா இசையமைக்கவுள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் பணியாற்றியதன் மூலம் அறியப்பட்டவர். 

சைக்கலாஜிக்கள் திரில்லர் படமான, இதன் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் ரீமேக் உரிமையை ஐரோப்பிய நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. முதலில் இப்படத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். ஆங்கில ரீமேக்கில் தென்னிந்திய நடிகர் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என அந்நிறுவனம் விரும்புகிறது. அதிலும் குறிப்பாக விஜய் அப்படத்தின் ஆங்கில ரீமேக்கில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என ஐரோப்பிய நிறுவனம் கருதுகிறது. அதற்காக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிறுவனம் பேசிவருகிறது.

விஜய், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் 'புலி' படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 2015-ஆம் ஆண்டு படு பிசியாக இருக்கும் விஜய் 'ஒண்ணுமே புரியல' படத்தின் ஆங்கில ரீமேக்கில் நடிப்பது பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லையாம். எனினும் இப்படத்தில் விஜய் நடித்தால் ஆங்கில சினிமாவில் நடிக்கும் இரண்டாவது தமிழ் சினிமா நடிகராக விஜய் இருப்பார். இதற்கு முன்பு ரஜினி ஆங்கில படத்தில் டாக்சி டிரைவராக நடித்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close