நயன்தாரா போடும் கண்டிஷன் - குழப்பத்தில் இயக்குநர்கள்!

நயன்தாரா நடிப்பது முதல், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது வரை என பல விஷயங்களில் தனக்கென ஒரு கொள்கையை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆர்யா தயாரிப்பில் வெளியான ‘அமரகாவியம்’ படத்தின் இசை நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொண்ட போதே சினிமா வட்டாரத்தில் அவரது படத்தின் விழாக்களுக்கே வருவது இல்லை. இந்த படத்திற்கு எப்படி வந்தார் என முணுமுணுத்தனர். 

இந்நிலையில் புது பிரச்சனையாக தான் நடிக்கும் படங்களில் இன்னொரு ஹீரோயின் என்றால் நயன்தாரா சற்று இடையூறு கொடுப்பதாக தகவல்கள் ஏற்கனவே உள்ளது. இப்படித்தான் வெங்கட் பிரபுவின் ‘மாஸ்’ படத்தில் நயன் கொடுத்த குடைச்சலின் பெயரில் தான் எமி ஜாக்சனை தூக்கியதாக கூறப்பட்டு வந்தது. 

இப்போது இதே பாணியில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்து தற்போது விலகியுள்ளார். இதற்கு காரணம் எமி ஜாக்சன் படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதாலேயே என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

இப்போது ‘ராஜா ராணி’ படத்தில் வேலை செய்த அத்தனை தொழிநுட்ப கலைஞர்களும் படத்தில் பணியாற்ற உள்ளனர். இசையும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் செய்கிறார். ஆனால் ஹீரோயின் மட்டும் நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!