விஜய்யின் ‘புலி’ படத்தில் பவர்ஸ்டாரா?

விஜய்யின் 58வது படம் சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’. தென்னிந்தியாவின் இரண்டு குயின்ஸ் ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா என்று நட்சத்திரப் பட்டாளமே நடித்து வெளிவரவரவிருக்கும் இப்படத்தில் தற்போது பவர்ஸ்டார் நடிப்பார் என்று பேச்சு நடைபெற்றுவருகிறது.

முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய்யுடன் நடிக்கவிருப்பதாகவும்,  ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்தில் பவர் ஸ்டார் நடித்தது குறிப்பிடத்தக்கது. ‘புலி’ படத்தில் நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்படவில்லை என்றாலும் அவரை படத்தில் நடிக்க வைப்பதற்கான தீவிர முயற்சிகள் நடக்கின்றனவாம்.

பவர்ஸ்டார் பல தமிழ் படங்களில் நடித்துவிட்டார். அனைத்தும் அடுத்தடுத்து வெளிவரவிருக்கிறது. ‘புலி’ படத்தில் நடித்தால் இவரின் மார்க்கெட் இன்னும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் காலத்து கதையாக ஃபேண்டசி படமாக உருவாகும் இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். எனவும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!